இணையம்
மூலம் பணம் சம்பாதிக்க ஏதேனும் வழிமுறை இருக்குமா என்று யோசிக்காத நடுத்தரவர்க்க
நபர்களே இல்லை எனலாம், இந்த பெயரில் பல மோசடிகளும் உள்ளன. இவைகளிடமிருந்து நாம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல இணைய உலகில் பணம் சம்பாதிக்க நிறைய நம்பகமான வழிகளும் உள்ளன. கூகுள் ஆட்சென்ஸ்
மாதிரி(இது பற்றியெல்லாம் பி
இதுபோன்ற
இணையத்தளங்களைப் பற்றியும் அவைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்
பற்றியும் இந்த தளத்தில் எழுதலாம் என்று உள்ளேன்.,வாசகர்கள் தங்களின் கருத்துக்களை
தருவார்களாக !!
பணம்
சம்பாதிக்க துவங்கும் முன்...
1.உங்களிடம்
பேங்க் அக்கவுன்ட் இருக்க வேண்டும்
2.மறக்காமல்
அதில் ஆன்லைன் பேங்கிங்க் வசதியை துவக்கிக்கொள்ளுங்கள்
3.முக்கியமாக உங்களுக்கு Paypal தளத்தில் கணக்கு இருக்கு வேண்டும் (இது நம் ஜிமெயில் கணக்கு துவங்குவது
போல எளிமையானது மற்றும் இலவசமானது.)
இதெல்லாம்
ஏன் செய்ய வேண்டும்??
ஆன்லைன்
மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் கைக்கு வரவேண்டுமானால் இதெல்லாம்
அவசியமாகிறது.
Paypal கணக்கு துவங்குவது எப்படி?
Paypal.com சென்று கொள்ளுங்கள்
அதில் Personal என்கிற
ஆப்சனை தேர்வு செய்து , அடுத்து வரும் பக்கத்தில் விவரங்களை கொடுத்து அக்கவுன்ட்
கிரியேட் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள்
ஆன்லைன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை (வெவ்வேறு தளங்கள் மூலம்) பேபல்
அக்கவுன்டிற்கு மாற்றிக்கொள்ள முடியும்
அதன் பின் நீங்கள் Paypal தளத்தில்
தங்கள் வங்கி விவரங்களை கொடுத்து.நீங்கள் சம்பாதித்த பணத்தை நேரடியாக
பெற்றுக்கொள்ளலாம்
Paypal தளம் அநேகம் நபர்களால் பயன்படுத்தப்படும்
அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான சேவை, என்பதால் நீங்கள் நம்பி சேரலாம்
குட்டி
வேலை தரும் தளங்கள்:
இணைய உலகில் பணம் சம்பாதிக்க நிறைய வழிமுறைகள் உள்ளன என்பது நாம்
அறிந்த்தே, அதில் மிகவும் சிறப்பான மற்றும் அதிக நபர்களுக்கு அறியப்படாத சேவை Micro work எனப்படும் குட்டி வேலை வாய்ப்புகளை
தரும் தளங்கள்.
இந்த
தளங்களில் காப்பி பேஸ்ட் செய்தல், ஒரு குறிப்பிட்ட பேஜிற்கு பேஸ்புக்கில் லைக்
கொடுத்தல், வலைத்தளத்தில் கமென்ட் கொடுத்தல்,அவர்கள் கூறும் பொருள் பற்றி ரிவீயூ
எழுதல் என சின்ன சின்ன வேலைகள் உங்களுக்கென தரப்படுகிறது. அதை நீங்கள் முடிக்கும்
போது அவர்கள் கூறிய பணம் உங்கள் அக்கவுன்டில் கிரெடிட் ஆகும்
இந்த
பணம் ஒரு குறிப்பிட்ட தொகையை அடைந்தவுடன் அதை நீங்கள் உங்கள் பேபல் அக்கவுன்ட்
-ற்கு பறிமாற்றிக்கொள்ளலாம், பின் பேங்கிற்கு மாற்றி கையில் பெற்றூக்கொள்ளலாம்..
#1
தளம்:
இந்த
தளங்களில் நம்பர் ஒன்னில் இருப்பது அமேசான் நிறுவனத்தின் மெக்கனிக்கல் டர்க்,
என்னமோ ஏதோ இந்த நிறுவனம் திடீர்னு அமெரிக்க நபர்களுக்கு மட்டும் தான் வேலை
கொடுப்போம், மற்ற நாடுகளுக்கு தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்து
விட்டது.
இந்த தளத்தில் நீங்கள் சேர்ந்து உங்கள் அடிப்படை தகவல்கள் அதாவது, உங்கள்
கல்வித்தகுதி, ஆர்வங்கள்(Interest),உங்களுக்கு
தெரிந்த மொழி போன்ற தகவல்களை நிரப்பி உங்கள் புரொபைலை உருவாக்குங்கள்
ஏனென்றால்
புரொபைல் அடிப்படையிலேயே,உங்கள் புரொபைலை பரீசிலீத்து உங்களுக்கு வேலை தரப்படும்.
பின்
நீங்கள் தரப்பட்ட வேலையை செய்ய தகுதியானவரா என்று சோதிக்க குட்டி டெஸ்ட்
வைக்கப்படும் (அட ஈசியான டெஸ்ட் தாங்க., பணம் சம்பதிக்கனும்னா இதக்கூட செய்யலைனா
எப்படி)
அதில்
பாஸ் என்றால் உங்களுக்கு பணிகள் தரப்படும், நீங்கள் பணியை முடிக்க முடிக்க உங்கள்
அக்கவுன்ட் கிரெடிட் செய்யப்படும், 1 யூரோ சேர்ந்தாலே அதை நீங்கள் பேபல்
அக்கவுன்டிற்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ள முடியும் !!
நீங்கள் இந்த தள்த்தில் சேர்ந்தவுடன் போனஸாக 10 யூரோ வரை இந்த தளம் தருகிறது !!
அடுத்த
பதிவில் இன்னும் சில விவரங்களுடன் சந்திக்கிறேன். வாசகர்களின் கருத்துக்கள்
விமர்சன்ங்கள் வரவேற்க்கப்படுகின்றன.